Friday 3rd of May 2024 11:20:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
தெற்காசிய ஒத்துழைப்பினை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் பாக்.பிரதமர்!

தெற்காசிய ஒத்துழைப்பினை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் பாக்.பிரதமர்!


தெற்காசிய பிராந்திய நாடுகளிடையே உள்ள பிரச்சினைகள் ஒத்துழைப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசிய அவா் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை மோதல்கள் மூலம் தீா்க்க முடியாது என்பதை பிராந்திய நாடுகள் உணர வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை காலை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசும்போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சார்க் உள்ளிட்ட தெற்காசிய அமைப்புக்களைப் பயன்படுத்தி பிராந்திய ஒத்துழைப்பு மூலம் நிலையான வளர்ச்சி மற்றும் செழிப்புமிக்க பிராந்தியத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமா் கூறினார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று நோயை வெற்றிகரமாகக் கையண்டதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு அவா் பராட்டுத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள், வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது குறித்து நடவடிக்கைகள் குறித்தும் அவர் இலங்கை ஜனாதிபதிக்கு விளக்கினார்.

மேலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தமக்கிடையிலான ஒத்துழைப்புக்களின் ஊடாக முன்னோக்கிக் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இம்ரான் கான் வலியுறுத்தினார்.

அதேவேளை, கோவிட்-19 உள்ளிட்ட பிற சவால்களைச் சந்திக்க பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்புழைப்பின் தேவையை உணா்ந்து நெருக்கமாகச் செயற்பட இரு நாடுகளின் தலைவா்களும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்தப் பேச்சின்போது இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மோசமான நிலைமை குறித்து இம்ரான் கான் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான சர்ச்சைக்கு அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடி தணிந்த பின்னா் பாகிஸ்தானுக்கு வருகை தருமாறும் இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என இந்தச் சந்திப்புக் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE